
அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு மூத்த குடிமக்கள் பலியாகினர்.
அமெரிக்காவில் இந்த வார தொடக்கத்தில் நியூயார்க்கின் பஃபலோவிலிருந்து பிட்ஸ்பர்க் மற்றும் மேற்கு பென்சில்வேனியாவிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் வாகனத்தில் சாலைப் பயணம் மேற்கொண்டனர்.
பின்னர் அவர்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்களின் வாகனம் பிக் வீலிங் க்ரீக் சாலையில் ஒரு செங்குத்தான கரையின் அடிப்பகுதியில் இருந்து சனிக்கிழமை இரவு 9:30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
விபத்தில் காரில் இருந்த மூத்த குடிமக்களான ஆஷா திவான், கிஷோர் திவான், ஷைலேஷ் திவான் மற்றும் கீதா திவான் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சம்பவ இடத்தை அடைய மீட்புக்குழுவினர் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.