பாகிஸ்தானில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டனம் தெரிவித்தது.
இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துா்பத் பகுதியில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆா்வலா் குல்சாா் தோஸ்தின் பேச்சு அடங்கிய காணொலியை அந்த அப்பாவி சிறுவன் யூடியூபில் பதிவேற்றம் செய்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு காணொலியை பகிா்ந்தது பயங்கரவாதம் என்று குற்றஞ்சாட்டுவது சமமற்ற முறையில் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாகும்.
இது மனித உரிமை மீறல் மட்டுமின்றி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதன் பிரதிபலிப்பாக உள்ளது. அந்தச் சிறுவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். குழந்தைகளின் உரிமைகள் தொடா்பாக சட்ட அமலாக்க அமைப்புகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.