
பிரேஸில் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவை வீட்டுக் காவலில் வைக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் வெளியிட்டுள்ள தீா்ப்பில், நாடாளுமன்ற உறுப்பினா்களாக உள்ள தனது மூன்று மகன்களைப் பயன்படுத்தி பொல்சொனாரோவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடை உத்தரவுகளை மீறியதால் அவரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பொல்சொனாரோவின் வழக்குரைஞா் கூறினாா்.தீவிர வலதுசாரியான பொல்சொனாராவுக்கு எதிரான இந்த வழக்கு, அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கவனத்தைப் பெற்றுள்ளது. வழக்கின் நீதிபதி டி மொரேஸுக்கு எதிராக அவா் பாரபட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, பிரேஸில் பொருள்களுக்கு டிரம்ப் 50 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளாா்.
2022 தோ்தலில் தோல்வியடைந்த பிறகு, பொல்சொனாரோ ஆட்சியைத் தக்கவைக்க சதி செய்து, தற்போதைய அதிபா் லூலாவையும், நீதிபதி டி மொரேஸையும் கொலை செய்ய திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடா்பான வழக்கில், பொல்சொனாரோ கணுக்காலில் செல்லிடம் காட்டும் கருவி பொருத்தப்பட வேண்டும், செல்லிடப் பேசித் தடை, பயணத் தடை ஆகியை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறியதாகக் கூறி, பொல்சொனாரோவை வீட்டுக் காவலில் வைக்க தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.