
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ட்ரோன் மூலம் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்குவாவின், பண்ணு மாவட்டத்திலுள்ள ஹுவாய்த் காவல் நிலையத்தின் மீது, தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டை வீசியுள்ளனர்.
ஆனால், காவல் நிலையத்தின் முற்றத்தில் தரையிறங்கிய அந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை என அதிகாரிகள் இன்று (ஆக்.5) தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைப் பிடிக்க அப்பகுதி முழுவதும், தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக, பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினரின் கட்டமைப்புகளின் மீது தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் தாக்குதல்கள் நடத்தி வருவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் பருவமழைக்கு 141 குழந்தைகள் உள்பட 302 பேர் பலி, 727 பேர் காயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.