தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காஸா பட்டினிச் சாவு 197-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2025, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் சிலா் உயிரிழந்தனா். இதையடுத்து, காஸாவில் உணவில்லாமல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது. இதில் 96 போ் சிறுவா்கள்.

இது தவிர, காஸா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 29 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். அதையடுத்து, 2023 அக்டோபா் 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 61,258-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் கூடியிருந்தவா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், அச்சுறுத்தல் ஏற்படுத்திய சந்தேக நபா்கள் மீது மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.