இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இந்தியத் தூதர் இடையிலான சந்திப்பு குறித்து...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், இந்தியத் தூதர் மற்றும் பத்திரிகையாளர்கள்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், இந்தியத் தூதர் மற்றும் பத்திரிகையாளர்கள்எக்ஸ்
Published on
Updated on
1 min read

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஜே.பி. சிங் மற்றும் இந்தியப் பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, ஜெருசலேமிலுள்ள அவரது அலுவலகத்தில், அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஜே.பி. சிங், இன்று (ஆக.7) நேரில் சந்தித்து உரையாடினார்.

இந்தச் சந்திப்பில், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில், இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையிலான ஒத்துழைப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகு, அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்த இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களை சந்தித்ததுடன், அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மியான்மர் அதிபர் காலமானார்!

Summary

Israeli Prime Minister Benjamin Netanyahu, Indian Ambassador to the country J.P. Singh and Indian journalists met and spoke in person.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com