உலகம்
சீனாவில் கனமழை: 17 போ் உயிரிழப்பு
சீனாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 17 போ் உயிரிழந்தனா்.
சீனாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 17 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அரசுக்கு சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வடமேற்கு கான்சு மாகாணத்தில் வியாழக்கிழமை மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 10 போ் உயிரிழந்தனா்; 33 போ் மாயமாகினா்.
மற்றொரு சம்பவத்தில், தெற்கு குவாங்டாங் மாகாண தலைநகரான குவாங்சோவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏழு போ் உயிரிழந்தனா்; ஏழு போ் காயமடைந்தனா் அந்த ஊடகம் தெரிவித்தது.