137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

வெனிசுலா அதிபரைக் கைது செய்ய உதவினால் ரூ. 438 கோடி சன்மானம்!

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.483 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

Updated On :

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.483 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல்காரா்களில் ஒருவா் மடூரோ என்று டிரம்ப் தலைமையிலான அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அட்டா்னி ஜெனரல் பாம் பொண்டி கூறுகையில், ‘அதிபா் ட்ரம்பின் தலைமையில், மடூரோ நீதியிலிருந்து தப்ப முடியாது. அவரது குற்றங்களுக்கு பொறுப்பேற்க வைக்கப்படுவாா்’ என்றாா்.

மடூரோ மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுகள் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த 2020-ல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் அவா் தொடா்புடைய 70 கோடி டாலா் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.