காஸா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212-ஆக உயா்வு

காஸா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212-ஆக உயா்வு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது.
Published on

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் 11 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உணவில்லாமல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது. இதில் சுமாா் 96 போ் சிறுவா்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் கூடியிருந்தவா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 21 போ் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்துடன், காஸாவில் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதலில் இதுவரை 61,369 போ் உயிரிழந்தனா்; 1,52,850 போ் காயமடைந்தனா்.

இதற்கிடையே, காஸாவின் முக்கிய நகரமான காஸா சிட்டியைக் கைப்பற்றி, சுமாா் 10 லட்சம் பாலஸ்தீா்களை தெற்கு பகுதியில் தடுப்பு மண்டலங்களுக்கு” வலுக்கட்டாயமாக இடமாற்ற இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஆனால், பல பாலஸ்தீா்கள் நகரை விட்டு வெளியேற மறுத்துள்ளனா்.

ஐ.நா., பல ஐரோப்பிய நாடுகள், சீனா உள்ளிட்டவை இஸ்ரேலின் இந்தத் திட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

X
Dinamani
www.dinamani.com