இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியதால் குழப்பம்
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்
Published on
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் அர்மேனியா - அஜர்பைஜான் இடையே வெள்ளிக்கிழமையில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த அமைதி ஒப்பந்தத்தின்போது, உலகில் மேற்கொள்ளப்படும் அமைதி ஒப்பந்தங்களின் தனது பங்கீடு குறித்து பேசினார்.

அவர் பேசுகையில், இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இன்றும் மற்றொரு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் (இந்தியா - பாகிஸ்தான்) பெரிதாக மோதிக்கொள்ள இருந்தனர். ஆனால், ஒரு அணுசக்தி மோதலுக்கு முன்னதாக அவர்கள் ஒன்றிணைந்து விட்டனர் என்று தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், காங்கோ ஜனநாயகக் குடியரசு - ருவாண்டா, தாய்லாந்து - கம்போடியா ஆகிய மோதல்களிலும் தனது அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து மேற்கோள் காட்டினார்.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தாலும், அதனை மத்திய அரசும் தொடர்ந்து மறுத்துத்தான் வருகிறது.

இருப்பினும், டிரம்ப் கூறுவதை நிறுத்தியபாடில்லை. தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வரும்நிலையில், செல்லும் இடமெல்லாம் பல்வேறு போர்களை நிறுத்தியதாக அவர் கூறிவருகிறார்.

Summary

Trump announces peace agreement between Azerbaijan and Armenia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com