
மருத்துவர்களை விட செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்தது என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மருத்துவ துறையில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒன்றாக செய்யறிவு தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் செய்யறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திலும் குரோக் என்ற செய்யறிவு அம்சம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து அதில் பல மேம்பாடுகளையும் எலான் மஸ்க் செய்து வருகிறார்.
இந்நிலையில், செய்யறிவு தொழில்நுட்பமான சாட் ஜிபிடி மூலம் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த கதையை பெண் ஒருவர் கூறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களின் கருத்துகளுக்கு சவால்விடும் வகையில் சில வழிமுறைகளைக் கூறி புற்றுநோயிலிருந்து மீண்டு வரச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த விடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது.
மருத்துவர்களுக்கு செய்யறிவுக்கும் இடையே மறைமுகமான போரின் தொடக்கமாக இது மாறியுள்ளதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மருத்துவர்களிடம் செல்வதற்கு முன்பு கூகுளில் சில தகவல்களைத் தேடி நோயிக்கான அறிகுறிகளைக் அறிந்துகொண்டு நோயாளிகள் செல்வதும் அதிகரித்து வருகிறது. இதனை கடைபிடிக்க வேண்டாம் என மருத்துவர்கள் சிலர் கூறுவதும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே மருத்துவர்களைக் காட்டிலும் செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்து விளங்குவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
பல மருத்துவர்களைக் காட்டிலும் செய்யறிவு சிறந்ததாக உள்ளது. இதுதான் உண்மை. இது மேலும் சிறந்ததாகவே மாறும். இது என்னுடைய தொழில் உள்பட, மற்ற வேலை செய்பவர்களுக்கும் பொருந்தும் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | டிரம்ப் விருந்துக்கு மறுப்பு! அமெரிக்க வரலாற்றை மாற்றியமைக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ஆஸ்கர் நடிகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.