காஸாவில் 2 ஆண்டுகளில் 238 பத்திரிகையாளர்கள் கொலை!

கடந்த 2023 முதல் காஸாவில் 238 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன
இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்
இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்AP
Published on
Updated on
1 min read

கடந்த 2023 முதல் காஸாவில் 238 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இப்போரின் ஒரு பகுதியாக பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரத்தை முடக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக காஸா குற்றம் சாட்டியுள்ளது.

காஸா நகரத்திற்கருகே உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் இன்று (ஆக. 11) கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர் என்ற குண்டு துளைக்காத கவசத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்துப் பேசிய ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாஹாயி, இஸ்ரேல் ராணுவத்தால் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், இஸ்ரேலின் விதிமீறல்களால், போர் குற்றங்களை கேள்வி கேட்கும் பத்திரிகையாளர் என்ற கவசத்திற்கு மதிப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், பத்திரிகை துறையில் ரத்தம் உறைந்து கிடப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் கடுமையான கண்டனம் என்பது கூட குறைந்தபட்ச நடவடிக்கையாகும் எனக் குறிப்பிட்ட பாஹாயி, உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு கொடூரமான இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறினார்.

போர் தொடங்கப்பட்ட 2023 அக்டோபர் 7 முதல் இதுவரை 238 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - காஸா இடையிலான போரில் 186 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | அல்-ஜசீரா செய்தியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 6 பேர் பலி!

Summary

Since October 2023, Israel has killed 238 journalists in Gaza, in the deadliest conflict ever recorded for reporters

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com