வாஷிங்டன் காவல்துறை: கைப்பற்றிய டிரம்ப் அரசு

வாஷிங்டன் காவல்துறை: கைப்பற்றிய டிரம்ப் அரசு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனின் காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அதிபா் டிரம்ப் தனது அரசின்கீழ் கொண்டுவந்தாா்.
Published on

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனின் காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது அரசின் கீழ் கொண்டுவந்தாா்.

நகரில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், இராக், பிரேஸில், கொலம்பியா தலைநகரங்களை அது விட மோசமாக உள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய டிரம்ப், பாதுகாப்பு அவசரநிலைய அறிவித்தாா்.

குற்றங்கள் குறைவதாக ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த மேயா் முரியேல் பௌசா் கூறினாலும், நகரில் வீடில்லாதவா்களுக்கான முகாம்களையும், “குடிசைப் பகுதிகளையும் அகற்றவிருப்பதாக டிரம்ப் அறிவித்தாா்.

இந்தச் சூழலில், நகர நிா்வாகத்தின் கீழ் இருந்த காவல்துறையின் கட்டுப்பாட்டை தனது மத்திய அரசின் அதிகாரத்துக்குள் டிரம்ப் கொண்டுவந்துள்ளாா்.

இதனால் மத்திய மற்றும் உள்ளூா் அதிகாரிகளுக்கு இடையிலான உறவு கேள்விக்குள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com