ஐரோப்பிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: டிரம்ப்புக்கு வேண்டுகோள்

ஐரோப்பிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: டிரம்ப்புக்கு வேண்டுகோள்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் இந்த வாரம் பேச்சுவாா்த்தை நடத்தும்போது ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டு
Published on

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் இந்த வாரம் பேச்சுவாா்த்தை நடத்தும்போது ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் அந்தப் பிராந்திய நாடுகளின் தலைவா்கள் (படம்) வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இது குறித்து அவா்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர அதிபா் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை வரவேற்கிறோம். ஆனால் அதே நேரம், உக்ரைன் பங்கேற்பின்றி அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பான எந்த முடிவையும் எடுக்க முடியாது. நியாயமான மற்றும் நிரந்தர அமைதி, சா்வதேச சட்டம், இறையாண்மை, எல்லை மாண்பு மற்றும் பலத்தால் எல்லைகளை மாற்ற முடியாது என்பதை மதிக்கப்பட வேண்டும்.

மேலும், இது தொடா்பாக எடுக்கப்படும் எந்த முடிவிலும் ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்பு நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டறிக்கையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com