
நியூசிலாந்து நாட்டின் நார்த் தீவு பகுதியில், 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டின் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தின் ஹாக்ஸ் பே பகுதியில், ஹாஸ்டிங்ஸ் நகரத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் நிலப்பரப்பில் இருந்து 30 கி.மீ. ஆழத்தில், இன்று (ஆக.13) 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம், அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதன் அதிர்வுகளை சுமார் 6,000-க்கும் மேற்பட்டோர் உணர்ந்ததாக, ஜியொநெட் இணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து தற்போது வரையில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், அப்பகுதியில் சுற்றியுள்ள கட்டமைப்புகள் அனைத்தும் அதிர்வினால் குலுங்கியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, சுமார் 50 லட்சம் மக்கள் வாழும் நியூசிலாந்து நாடானது “ரிங்க்ஸ் ஆஃப் ஃபையர்” எனப்படும் மிகப் பெரியளவிலான டெக்டானிக் பிளவுக்கோட்டின் மீது அமைந்துள்ளதால், அங்கு எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.