தென் கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது!

தென் கொரிய முன்னாள் அதிபரின் மனைவி கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...
கிம் கியோன் ஹீ
கிம் கியோன் ஹீAP
Published on
Updated on
1 min read

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, லஞ்சப் புகார் உள்பட 16 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் வெளியில் இருந்தால் சாட்சியங்களை கலைக்க நேரிடும் என காவல்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாத்தை ஏற்றுக்கொண்ட சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் கைது ஆணைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தென்கொரியாவில் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறி, அதிபர் யூன் சுக் இயோல் டிசம்பர் மாதத்தில் ராணுவ அவசர நிலையை அறிவித்தார். ராணுவ அவசர நிலைக்கு, நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியதால், சில மணி நேரங்களில் உத்தரவு கைவிடப்பட்டது.

இதனிடையே, ராணுவ அவசர நிலை உத்தரவு என்பது கிளர்ச்சிக்கு சமமானது என்று யூன் சுக் மீது பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.

தென் கொரிய வரலாற்றில் அதிபராக இருப்பவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இந்த நிலையில், அவரது மனைவியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Summary

South Korea Former First Lady Kim Keon Hee arrested in corruption probe

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com