உலகம்
வங்கதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான ஊழல் வழக்கு தொடக்கம்
வங்கதேசத்தில் மாணவா் போராட்டம் மூலம் கடந்த ஆண்டு பதவில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மற்றும் 17 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கின் விசாரணை, டாக்காவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை தொடங்கியது. மனை விற்பனையில் முறைகேடு செய்ததாக இந்த வழக்கில் ஷேக் ஹசீனா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
போராட்டத்தின்போது நிலைமை கைமீறியதால் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹசீனாவுக்கு எதிராக, இந்த வழக்கு மட்டுமின்றி மனித குலத்துக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.