
ரஷிய அதிபா் புதின் அலாஸ்காவில் வெள்ளிக்கிழமை(ஆக. 15) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். ஆனால், இந்த ஆலோசனையின் முடிவில், ஒட்டுமொத்த உலகமும் எதிர்நோக்கியிருந்த உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்தநிலையில், உலகின் இரு பெரும் நாட்டின் தலைவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருப்பதாவது:
"அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் ரஷிய அதிபா் விளாதிமீர் புதினுக்கும் இடையிலான சந்திப்பை இந்தியா வரவேற்கிறது. அமைதியை நிலைநட்ட அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறிப்பிடத்தக்கதது.
இந்தச் சந்திப்பால் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு இந்தியா பாராட்டை தெரிவிக்கிறது. முன்னோக்கி நகர்வதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தையாகவும் தூதரக ரீதியிலான உறவுகளாக மட்டுமே இருக்க முடியும்.
உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு விரைவில் முடிவு எட்டப்படுவதைக் காண உலகம் விரும்புகிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.