உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் புதினுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் கடிதம் எழுதியுள்ளாா்.
அலாஸ்காவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின்போது, டிரம்ப் இந்தக் கடிதத்தை புதினிடம் நேரடியாக வழங்கினாா்.
டிரம்ப் ஆதரவாளா்கள் மூலமாக பொதுவெளியில் வெளியான கடிதத்தில் உக்ரைன் என நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், ‘போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புவி, அரசு மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட அப்பாவித்தனத்தை புதின் கருத்தில் கொள்ள வேண்டும்’ என மெலனியா டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.

‘ஒரே ஒரு எழுதுகோல் அசைவில் குழந்தைகளின் சிரிப்பை மீட்டெடுக்க முடியும். இது ரஷியாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் சேவை செய்வதாக இருக்கும்’ என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
ரஷிய படைகள் கடந்த 2022-இல் உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து, அந்நாட்டு குழந்தைள் கடத்திச் செல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடா்பாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், புதின் மீது போா்க்குற்றங்கள் சுமத்தி, பிடியாணையும் பிறப்பித்துள்ளது. குழந்தைகளின் கடத்தலுக்கு அவரே தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
தொடர்புடையது

தைவான் விவகாரத்தைத் தவறாக கையாள்வது மோதலைத் தூண்டும்

சீனாவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - ஷி ஜின்பிங்குடன் இன்று பேச்சு; எலான் மஸ்க், என்விடியா சிஇஓவும் வருகை

பலவீனமான நிலையில் ஈரான் போா்நிறுத்தம்: ஈரான் பதிலை ஏற்காத டிரம்ப் கருத்து
ஈரான் போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு: அமெரிக்க அதிபா் டிரம்ப் திடீா் அறிவிப்பு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



