
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலியாகியுள்ளனர்.
சொஹொடா மாகாணம் கடா கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் நேற்று பிற்பகல் ஆற்றில் படகு மூலம் கொரொன்யா பகுதியில் உள்ள சந்தைக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 10 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 40 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
படகு கவிழ்ந்து 24 மணி நேரம் ஆன நிலையில் 40 பேரும் இறந்திருந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த 2024ல் படகு கவிழ்ந்த விபத்தில் 326 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் படகு போக்குவரத்து அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. படகை இயக்குபவர்கள் லைப் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு கவசங்களைப் பயன்படுத்தத் தவறுகின்றன, இதுவே விபத்துக்குக் காரணமாக அமைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.