மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு
மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

மியான்மர் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில், இன்று (ஆக.20) மாலை 6.16 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக, தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

இருப்பினும், மிதமான அளவிலான இந்த நிலநடுக்கத்தால், பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டிருக்காது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தினால் பின் அதிர்வுகள் உருவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் 28 ஆம் தேதி மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால், சுமார் 3,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பலரைக் கொல்வது வலிமை அல்ல: இஸ்ரேல் பிரதமருக்கு ஆஸி. பதிலடி!

Summary

A 4.2 magnitude earthquake has been reported in Myanmar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com