பாலியல் தொழிலுக்காகக் கடத்தல்! அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது!

அமெரிக்காவில் கடத்தலில் ஈடுபட்ட 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டது பற்றி...
கோப்புப்படம்
கோப்புப்படம் AP
Published on
Updated on
1 min read

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கில் 5 இந்தியர்களை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் மனித கடத்தலில் ஈடுபடும் கும்பலைக் குறிவைத்து கடந்த வாரம் மிகப்பெரிய அளவிலான சோதனையை காவல்துறையினர் நடத்தினர்.

ஒமாஹா மெட்ரோ பகுதிகளில் உள்ள விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 12 வயதுக்குள்பட்ட 10 பேர், 17 ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 27 பேரைக் காவல்துறையினர் மீட்டனர்.

இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அனைவரும் கடத்தப்பட்டு விடுதி பணிக்காக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. நீண்ட நேர வேலை, குறைவான ஊதியம், சிலருக்கு ஊதியமே வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், சில பெண்களையும் சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையின்போது, பாதிக்கப்பட்டவர்கள் அசுத்தமான இடத்தில் கரப்பான்பூச்சிகள் ஊர்ந்து செல்வதற்கு மத்தியில், தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த காட்சிகளைக் கண்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் விவரித்துள்ளனர்.

இந்த விடுதிகளை நடத்திவந்த அமெரிக்க வாழ் இந்தியர்களான கெந்தகுமார் செளத்ரி (36), ரஷ்மி அஜித் சமானி (42), அமித் செளத்ரி (32), அமித் பாபுபாய் செளத்ரி (33), மற்றும் மகேஷ்குமார் செளத்ரி (38) ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் மீது ஆள் கடத்தல், பெண்களை கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், விசா மோசடி, கொள்ளை, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் ரொக்கமாக வைத்திருந்த 5.65 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பின்படி ரூ. 5 கோடி) காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், விடுதிகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தையும் அமெரிக்க காவல்துறையினர் முடக்கிவைத்துள்ளனர்.

Summary

US police have arrested 5 Indians in connection with sex trafficking

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com