
யேமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், பலியானோரது எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானின் ஆதரவுப் பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையினர், இஸ்ரேல் மீது முதல்முறையாக கிளஸ்டர் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
இந்தத் தாக்குதகளுக்கு பதிலடியாக, ஹவுதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள யேமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல், கடந்த ஆக.24 தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதில், ஹவுதிகளின் ஒரேயொரு எண்ணெய் நிறுவனம், மின் உற்பத்தி நிலையம், ராணுவத் தளம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, எண்ணெய் நிறுவனம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களில் மட்டும் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 7 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உள்பட 102 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 21 பேரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹவுதிகள் செயல்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் அந்நாட்டுக்குச் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.