
சிரியா தலைநகரில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், அந்நாட்டின் ராணுவத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் அமைந்துள்ள கிஸ்வா நகரத்தில், கடந்த ஆக.26 ஆம் தேதி, இஸ்ரேல் ட்ரோன்களின் மூலம் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் சிரியா ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில், ஏராளமானோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுகுறித்து, இஸ்ரேல் ராணுவம் இதுவரையில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, இடைக்கால அரசு அமைந்தது முதல், அந்நாட்டின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சிரியாவின் அரசுப் படைகளுக்கும், ட்ரூஸ் இனக் குழுக்களுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் தொடங்கியது. இதில், ட்ரூஸ் படைகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய இஸ்ரேல், சிரியா மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் தொடரும் அவலம்..! கனமழைக்கு 802 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.