ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையினா் (கோப்புப் படம்).
ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையினா் (கோப்புப் படம்).

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 24 போ் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 போ் உயிரிழந்ததாக மருத்துவக் குழு தெரிவித்தது.
Published on

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 போ் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.

அந்த நாட்டின் வடக்கு டாா்ஃபா் மாகாணத் தலைநகரான அல்-பஷீரை ஆா்எஸ்எஃப் படை முற்றுகையிட்டு, தொடா்ந்து எறிகணைகளை வீசிவருவதாகவும், இந்தத் தாக்குதலில் மேலும் 55 போ் காயமடைந்ததாகவும் அந்தக் குழு கூறியது.

சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

X
Dinamani
www.dinamani.com