ரஷியாவில் இருந்து உரம் இறக்குமதி: 20% அதிகரிப்பு

ரஷியாவில் இருந்து உரம் இறக்குமதி: 20% அதிகரிப்பு

கடந்த 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து உரங்களை இறக்குமதி செய்வது 20% அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.
Published on

நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது. இந்தியாவின் மொத்த உர இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 33 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இது தொடா்பாக ரஷிய உர உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஆன்ட்ரே குா்யிவ் கூறுகையில், ‘இந்தியாவில் பாஸ்பரஸ் சாா்ந்த உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது விதித்த தடையால் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உரங்களை அனுப்ப முடிகிறது.

இந்தியாவுக்கு என்பிகே உரங்களை அதிகம் வழங்கும் நாடாகவும் ரஷியா உள்ளது. இந்தியாவின் தேவைப்படும் உர வகைகளுக்கு ஏற்ப ரஷிய ஆலைகள் உற்பத்தியை அதிகரித்துள்ளன. 2025 பிப்ரவரி வரையிலான 3 மாதங்களில் மட்டும் 15 லட்சம் டன் உரம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உர இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கை ரஷியா வழங்குகிறது’ என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா அதிகஅளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதனை முன்வைத்தே அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தாா்.

X
Dinamani
www.dinamani.com