கூடுதல் வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு: நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிரம்ப்

கூடுதலாக விதிக்கப்பட்ட வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிரம்ப் கூறியிருக்கிறார்.
India Suspends Postal Services To US After Trumps Tariffs
அமெரிக்க அதிபர் டிரம்ப்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

வரிகளை நீக்கினால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்திருக்கும் வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்துத் தெரித்திருக்கிறார்.

வாஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம், டிரம்ப் விதித்திருக்கும் வரிகள் சட்டவிரோதமானது என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருக்கிறது.

எனினும், வரி விதிப்புகளை ரத்து செய்ய மறுத்துவிட்ட நீதிமன்றம், ஃபெடரல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கால அவகாசம் வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசியிருக்கும் டொனால்ட் டிரம்ப், தீர்ப்பு மிகத் தவறானது, அனைத்து வரிகளும் நடைமுறையில் இருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்று, பார்டிசன் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றம், நம்முடைய வரி விதிப்புகள் நீக்கப்பட வேண்டும் என்று தவறான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், அவர்களுக்குத் தெரியும், இறுதியில் நாம்தான் வெல்வோம் என்று, என டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சமூகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை, அமெரிக்க வரிகள் நீக்கப்பட்டால், அது நாட்டுக்கு பேரழிவாக மாறிவிடும். வர்த்தக சமநிலையின்மை மற்றும் நியாயமற்ற வரிகளை தொடர்ந்து நாடு தாங்கிக் கொண்டிருக்க முடியாது, இதர நாடுகள் அமெரிக்காவுக்கு விதிக்கும் வரிகளை நாம் தாங்கிக் கொண்டிருக்க வேண்டுமா அது நண்பர்களாக இருந்தாலும் சரி எதிரிகளாக இருந்தாலும் சரி என்று குறிப்பிட்டுள்ளார்.

தான்னால், உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி விதிப்பு என்பது, வர்த்தகப் போர் என்று குறிப்பிடும் டிரம்ப், இதுதான் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களைக் காக்க மிகச் சிறந்த கருவி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக, பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதித்து வந்தன. ஆனால், இப்போது, அமெரிக்காவை பணக்கார, பலமான, அதிகாரம் கொண்ட நாடாக மாற்ற நான் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com