என்ன ஆனது? எக்ஸ் தளத்தில் டிரெண்டாகும் `டிரம்ப் இஸ் டெட்’ பதிவுகள்!

டிரம்ப் இறந்ததாக சமூக ஊடகங்களில் இணையவாசிகளின் பதிவுகளால் குழப்பம்
டிரம்ப்புக்கு என்ன ஆனது?
டிரம்ப்புக்கு என்ன ஆனது?
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உயிரிழந்து விட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அமெரிக்காவின் மிக பிரபலமான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்ட்டூன் தொடர் நிஜ வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைக் கணிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொடரின் சில காட்சிகளும் அதற்கேற்றவாறே உண்மையாகவும் நடந்தேறின.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 29 ஆம் தேதியில் மாரடைப்பால் இறந்து விடுவார் என்று சிம்ப்ஸன்ஸ் தொடர் பொம்மைகளைப் போன்று ஏஐ மூலம் சித்திரித்த படத்தை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இருப்பினும், சிம்ப்ஸன்ஸ் தொடரில் அதுபோன்று எதுவும் காட்டப்படவில்லை.

இதனிடையே, டிரம்ப்பின் உடல்நிலை குறித்து சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் கிளம்பிய நிலையில், அவருக்கு ஏதேனும் நேர்ந்தால், அதிபர் பதவியை ஏற்கவும் தயார் என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தது மேலும் சந்தேகத்தைக் கிளப்புவதாக இணையவாசிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில்தான், டிரம்ப் உயிரிழந்தாரா? என்ற கேள்விகளுடன் சமூக ஊடகங்களில் பதிவிடும் இணையவாசிகள், அது உண்மையென்றால், டிரம்ப் உயிரிழப்பு குறித்த பதிவுகளுக்கு லைக் இடுபவர்களுக்கு பரிசுகள் வழங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஒருவரோ இருவரோ அல்ல; எண்ணில்லாடங்காதவர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் 50 டாலர் முதல் 1000 டாலர் வரையில் பரிசளிப்பதாகக் கூறுகின்றனர். தற்போது எக்ஸ் தளத்தில் 1.26 லட்சம் பதிவுகளுடன் Trump is dead என்று டிரெண்டிங் வரிசையிலும் இது இடம்பெற்றுள்ளது.

ஆனால், சில மாதங்களுக்கு முன்னதாகவும் இதுபோன்று டிரம்ப் இறந்து விட்டதாக சிம்ப்ஸன்ஸ் படத்துடன் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின.

Summary

‘Trump Is Dead’ — The Top Trend On Social Media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com