அமெரிக்கா, இந்தியா மீது விதித்திருக்கும் 50 சதவீத வரி என்பது, யானையை எலி தாக்குவது போலத்தான், அது நகைச்சவையாக இருக்குமே தவிர, அச்சுறுத்தலாக இருக்காது என்று அமெரிக்க பொருளாதார நிபுணரான ரிச்சர்ட் வோல்ஃப் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.
உலகின் அதிகார மையம் மாறிக் கொண்டிருக்கிறதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அமெரிக்கா தலைமை தாங்கும் ஜி7 நாடுகள், தற்போத பொருளாதாரத்தில் பலம்கொண்டவையாக இல்லை. இந்தியா தலைமை தாங்கும் பிரிக்ஸ் நாடுகள்தான் பொருளாதார அளவில் முன்னிலையில் உள்ளன. இதன் மூலம் ஜி7 அமைப்பை பிரிக்ஸ் அமைப்பு பின்னுக்குத் தள்ளியிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகில், அதிகாரம் கொண்ட நாடாக அமெரிக்கா இப்போதும் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை. புதிய அதிகார வரிசை உருவாகி வருகிறது. இந்தியா, ரஷியா, சீனாவைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 35 சதவீதமாக இருக்கும் நிலையில், ஜி7 நாடுகளின் வளர்ச்சியோ வெறும் 28 சதவீதம்தான்.
அமெரிக்கா இத்தனை அழுத்தம் கொடுத்தும், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது என்றால், அதிகார வரிசை மாறிவிட்டதற்கான அறிகுறிதானே.
எனவே, இந்தியாவை அமெரிக்கா அதிகாரம் செய்வது என்பது, யானையை எலி தாக்குவது போலத்தான். இது நகைச்சுவையாக இருக்குமே தவிர அச்சுறுத்தலாக மாறாது.
அமெரிக்க அதிபரின் நடவடிக்கை, பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு இடையே மேலும் ஒற்றுமையை அதிகரித்து, புதிய அதிகார வரிசை பலமாகி வருகிறது.
அதிக வரி விதித்து, இந்தியாவுக்கான அமெரிக்க கதவுகளை மூடினால், இந்தியா தன்னுடைய பொருள்களை ஏற்றுமதி செய்ய வேறு நாடுகளைத் தேடும். அமெரிக்காவுக்கு மட்டும்தான் பொருள்களை இந்தியா அனுப்ப முடியாது. ஆனால், பிரிக்ஸ் நாடுகளை அதன் ஏற்றுமதியில் இந்தியா சேர்த்துக்கொள்ளப்போகிறது.
அமெரிக்க கொள்கையால்தான், சராசரியாக இருந்த பிரிக்ஸ் அமைப்பு மேலும் விரிவடைந்து, அந்த நாடுகளுக்குள் ஒருங்கிணைப்பு அதிகரித்து, மேலும் பல ஒப்பந்தங்கள் வெற்றியடைந்து, மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தையே மாற்றியக்கப்போகிறது என்றும் எச்சரித்துள்ளார் வோல்ஃப்.
உண்மையில், உலகின் மிக அதிகாரம் கொண்ட நாடாக அமெரிக்கா தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அவ்வாறு நினைத்து அது செய்யும் அதிகார நடவடிக்கைகள், நகைச்சுவையாக சொல்வது என்றால், அது தன்னைத் தானே காலில் சுட்டுக் கொள்வதற்கு சமம் என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்பு!

இந்திய பொருள்கள் மீது 10% வரி: அமெரிக்கா விதிப்பு

அமெரிக்காவில் அதிக அளவில் முதலீடு செய்யும் இந்தியா: அமெரிக்க அரசு மூத்த அதிகாரி

12% கூடுதல் வரி விதிப்பு பரிந்துரையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்தியா
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



