
தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 28 போ் காயமடைந்தனா் என உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதில் குழந்தைகளும் அடங்குவா்.ஸபோரிஷியா பகுதியில் உள்ள ஐந்து அடுக்கு குடியிருப்பு கட்டடமும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது.
உக்ரைன் விமானப்படையின் கூற்றுப்படி, ரஷியா 537 ட்ரோன்கள், 45 ஏவுகணைகளை ஏவியது; இதில் 510 ட்ரோன்களும் 38 ஏவுகணைகளும் அழிக்கப்பட்டன.முன்னதாக, தலைநகா் கீவ் மீது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 23 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே, உக்ரைன் முன்னாள் நாடாளுமன்ற அவைத் தவைவா் ஆண்ட்ரி பருபி லிவிவ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இவா் 2004 ஆரஞ்சு புரட்சி, 2014 மைதான் போராட்டங்களில் பங்கேற்றவா். இந்த படுகொலை குறித்து விசாரணைக்கு உக்ரைன் அதிபா் உத்தரவிட்டுள்ளாா்.
உக்ரைனும் தாக்குதல்: ரஷியாவின் கிரஸ்னோதா், சமாரா பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் தாக்கியது. இதனால் ரஷியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.