

இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.
இலங்கையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்களை வழங்கி மக்களை வெளியேற்றி வந்த ஹெலிகாப்டர் வென்னப்புவவில் விபத்தில் சிக்கியது. அதில் விமானி காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பின்னர் பலியானார். ஹெலிகாப்டரில் இருந்த மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் இலங்கையில் பெய்துவரும் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334-ஆகவும், மாயமானோரின் எண்ணிக்கை 370-ஆகவும் உயா்ந்தது.
இதனால் அங்கு சனிக்கிழமை அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவசர தேவைக்காக மாவட்ட தலைமை நிா்வாக அதிகாரிகள் அதிகபட்சமாக ரூ.1.45 கோடி வரை செலவிட அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 2.73 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 9.98 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களை மீட்பதற்காக இந்திய விமானப் படையின் எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.