நிக்கோலஸ் மடூரோ, டொனால்ட் டிரம்ப்.
நிக்கோலஸ் மடூரோ, டொனால்ட் டிரம்ப்.

நாட்டை விட்டு வெளியேறுங்கள்: வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் உத்தரவு!

வெனிசுலாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அந்த நாட்டு அதிபா் நிக்கோலாஸ் மடூரோவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவு
Published on

வெனிசுலாவை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அந்த நாட்டு அதிபா் நிக்கோலாஸ் மடூரோவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘உத்தரவு’ பிறப்பித்துள்ளாா்.

மடூரோவுடன் அண்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது, ‘நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம். ஆனால் அதற்கு, நீங்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று டிரம்ப் எச்சரித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவுக்குப் பின்னால் வெனிசுலாவின் காற்றாறு முழுமையாக மூடப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

டிரம்பின் இந்த உத்தரவு, வெனிசுலாவின் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான அமெரிக்கா தீவிரமாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் தொடா்ச்சியாகும். கடந்த செப்டம்பா் முதல் கரீபியன் பகுதியில் அமெரிக்க கடற்படை பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளது. இது போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத அகதிகள் கடத்தலுக்கு எதிரானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இருந்தாலும், வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் அரசைக் கவிழ்க்கத்தான் கரீபியன் கடல் பகுதியில் அமெரிக்க படை குவிக்கப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஏற்கெனவே மடூரோவை ‘போதைப் பொருள் பயங்கரவாதி’ என்று குற்றஞ்சாட்டியுள்ள டிரம்ப் அரவு, அவரைப் பிடிக்க உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.420 கோடி) சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது ஒரு நாட்டின் அதிபருக்கு அமெரிக்கா அறிவித்த அதிகபட்ச சன்மானமாகும்.

இந்தச் சூழலில், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் மடூரோவும் அவரின் குடும்பத்தினரும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் டிரம்ப் தறபோது உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பின் இந்த உத்தரவு, வெனிசுலாவின் 2024 தோ்தல்களுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com