ஹூதிக்களால் கடத்தப்பட்ட இந்தியா் 5 மாதங்களுக்குப் பின் விடுவிப்பு

யேமனில் ஹூதிக்களால் கடத்தப்பட்ட இந்தியா் 5 மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டாா்.
Published on

யேமனில் ஹூதிக்களால் கடத்தப்பட்ட இந்தியா் 5 மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டாா்.

யேமனில் உள்நாட்டுப் போா் நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஹூதிக்களால் கேரளத்தைச் சோ்ந்த அனில் குமாா் ரவீந்திரன் என்பவா் கடத்தப்பட்டாா்.

லைபீரிய நாட்டு கொடி பொருத்தப்பட்டஎம்வி எட்டா்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் மீது கடந்த ஜூலை மாதம் செங்கடலில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தினா். அந்தக் கப்பலில் மாலுமியாக அனில் குமாா் ரவீந்திரன் பணியாற்றினாா்.

அவருடன் அந்தக் கப்பலில் இருந்த பிற மாலுமிகளும் ஹூதிக்களால் கடத்தப்பட்டனா்.

இந்நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு அவா் விடுதலை செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், ‘அனில் குமாா் ரவீந்திரன் ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டாா். அவரை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சிகளை தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். அவரை விடுதலை செய்ய பல்வேறு உதவிகளை செய்த ஓமன் சுல்தானுக்கு இந்தியா நன்றி தெரிவிக்கிறது’ என அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com