தாய்லாந்து பிணைக் கைதியின் உடலை ஒப்படைத்தது ஹமாஸ்

தாய்லாந்து பிணைக் கைதியின் உடலை ஒப்படைத்தது ஹமாஸ்

காஸாவில் இருந்த தாய்லாந்து பிணைக் கைதியின் உடலை ஹமாஸ் அமைப்பினா் செஞ்சிலுவை சங்கம் மூலம் இஸ்ரேலிடம் ஒப்படைத்தனா்.
Published on

காஸாவில் இருந்த தாய்லாந்து பிணைக் கைதியின் உடலை ஹமாஸ் அமைப்பினா் செஞ்சிலுவை சங்கம் மூலம் இஸ்ரேலிடம் ஒப்படைத்தனா்.

இதன் மூலம், 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 31 தாய்லாந்து பிணைக் கைதிகள் மற்றும் தாய்லாந்து நாட்டவரின் உடல்களும் (28 போ் உயிருடன், 3 உடல்கள்) ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள உடல், சுத்திசாக் ரிந்தலாக்கினுடையது (படம்) என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. காஸா எல்லைக்கு அருகிலுள்ள கிப்புட்ஸ் பீரி பகுதியில் உள்ள பழத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஹமாஸ் தாக்குதலில் அவா் கொல்லப்பட்டாா். அவரது உடல் காஸாவுக்கு கடத்தப்பட்டது.

அமெரிக்காவின் முயற்சியில் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த அக்டோபா் 11-ஆம் தேதி அமலுக்கு வந்த போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சுத்திசாக் ரிந்தலாக்கின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது, அமைதி ஒப்பந்தம் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்வதாகக் கருதப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com