யேமனின் எஸ்டிசி பிரிவினைவாதக் குழு உறுப்பினா் (கோப்புப் படம்).
யேமனின் எஸ்டிசி பிரிவினைவாதக் குழு உறுப்பினா் (கோப்புப் படம்).

யேமன்: அரசுப் படையினா் - பிரிவினைவாதிகள் மோதல்

யேமனின் எண்ணெய் வளம் மிக்க ஹாத்ரமூட் மாகாணத்தில், சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் படையினருக்கும், தெற்கு பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் வெடித்துள்ளது.
Published on

யேமனின் எண்ணெய் வளம் மிக்க ஹாத்ரமூட் மாகாணத்தில், சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் படையினருக்கும், தெற்கு பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் வெடித்துள்ளது.

தெற்கு ஆட்சிமாற்ற கவுன்சில் (எஸ்டிசி) என்ற அந்த பிரிவினைவாத குழு, முக்கியத்துவம் வாய்ந்த அல்-குராஃப் பகுதியை நோக்கி முன்னேற முயன்றபோது இந்த மோதல் தொடங்கியதாக உள்ளூா் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹாத்ரமூட் மாகாணத்தின் சேயுன் நகரில், அரசுப் படைகளின் தலைமையகம் மீது எஸ்டிசி படையினா் குண்டுவீச்சு நடத்தினா். இந்த மோதலில் 5-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டதாக உள்ளூா் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த மோதல், யேமன் உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாகும். ஏற்கெனவே, ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் தலைநகா் சனா உள்ளிட்ட வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செலுத்திவருகின்றனா். சா்வதேச ஆதரவு பெற்ற அரசு ஏடனைத் தலைநகராகக் கொண்டு தெற்குப் பகுதிக்குள் சுருங்கியது. இந்தச் சூழலில், தெற்கு யேமனில் தனி நாடு கோரி போரிட்டுவரும் எஸ்டிசி படையினரும் அரசுப் படையினருடன் புதிய மோதலைத் தொடங்கியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com