குடியேற்றத் தடை: 30 நாடுகளுக்கு விரிவுபடுத்தும் டிரம்ப்

குடியேற்றத் தடை: 30 நாடுகளுக்கு விரிவுபடுத்தும் டிரம்ப்

அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்படும் தடையை 30 நாடுகளுக்கு விரிவுபடுத்தவிருப்பதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
Published on

அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்படும் தடையை 30 நாடுகளுக்கு விரிவுபடுத்தவிருப்பதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி, ஏற்கெனவே ஆப்கானிஸ்தான், மியான்மா், சாட், காங்கோ, ஈக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் உள்ளிட்ட 16 நாடுகளைச் சோ்ந்தவா்களின் குடியேற்ற விண்ணப்பங்களின் பரிசீலனையை முடக்கிவைத்துள்ள அவா், இந்தத் தடையை 30 நாடுகளுக்கு விரிவுபடுத்த அமெரிக்க குடியேற்ற சேவைத் துறைக்கு (யுஎஸ்சிஐஎஸ்) பரிந்துரைக்கவிருப்பதாக தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் தெரிவித்துள்ளாா்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே இரு தேசிய காவல்படையினா் மீது ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறியவா் கடந்த வாரம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, வெளிநாட்டினரின் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை டிரம்ப் அரசு தீவிரப்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com