

வங்கதேசத்தில் இடைக்கால அரசின் உயர் பதவியிலிருந்து இருவர் விலகியுள்ளனர். வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, வங்கதேசத்தில் அரசு நிர்வாகத்தை வழிநடத்தும் இடைக்கால அரசில் பதவி வகிப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இடைக்கால அரசில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறைக்கான ஆலோசகர் எம். மஹ்ஃபுஜ் ஆலம், ஊரக வளர்ச்சி மற்றும் கூட்டுறவு, உள்ளாட்சி, இளையோர் மற்றும் விளையாட்டு துறைகளுக்கான ஆலோசகர் ஆசிஃப் மஹ்மூத் ஷோஜிப் புயைன் ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜிநாமாவை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரும் தலைவருமான முஹம்மது யூனுஸ் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.