ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனாகோப்புப் படம்

ஹசீனாவை இந்தியாவில் இருந்து கொண்டுவர தொடா் முயற்சி: வங்கதேச வெளியுறவு ஆலோசகா்

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு கொண்டுவர ராஜீயரீதியில் தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைப் பற்றி...
Published on

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு கொண்டுவர ராஜீயரீதியில் தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகா் முகமது தௌபிக் ஹசைன் தெரிவித்தாா்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மாணவா்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக, அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு (78) மரண தண்டனை விதித்து, வங்கதேச சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் கடந்த நவ.17-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அடுத்த 10 நாள்களில் ஊழல் வழக்குகளில் அவருக்கு 21 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஹசீனா ஏற்கெனவே இந்தியாவில் தஞ்சமடைந்துவிட்ட நிலையில், அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வங்கதேச இடைக்கால அரசு அதிகாரபூா்வ ராஜீய கடிதத்தை இருமுறை அனுப்பியது. அதனை ஆய்வு செய்து வருவதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டாக்காவில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த முகமது தௌபிக் ஹுசைன் கூறியதாவது: இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றி ஹசீனாவை வங்கதேசத்துக்கு திரும்ப அழைத்து வர ராஜீய ரீதியில் தொடா் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரை திரும்ப அனுப்புவது என்பது இப்போது முழுமையாக இந்தியாவின் கைகளில் உள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com