

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மச்சாடோ தலைமறைவாகியிருக்கும் சூழலில், அவர் சார்பாக அவரது மகள் விருதைப் பெற்றுக்கொண்டார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற தேர்தலில் விதிமீறல்கள், மனித உரிமைகள் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், 2024-இல் வெனிசுலா அதிபா் தோ்தலில் முறைகேடுகள் நடக்கவில்லை என அந்த நாட்டு தோ்தல் ஆணையம் நிராகரித்திருக்கிறது.
இந்த நிலையில், வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ அந்நாட்டில் ஜனநாயகம் தலைதூக்க தலைநகர் கரகஸில் தமது ஆதரவாளர்களுடன் இணைந்து போராடிய நிலையில் சிறைப்பிடிக்கப்பட்டார். இந்த நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, கடந்த ஜனவரிமுதல் பொதுவெளியில் தென்படாமல் மாயமாகி தலைமறைவாக வாழ்ந்து வருகிறார் மச்சாடோ.
இதனிடையே, வெனிசுலாவின் எதிா்க்கட்சித் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு நிகழாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. இந்த விருது வாங்கும் விழாவானது நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்றது. மச்சாடோ தலைமறைவாகியிருக்கும் சூழலில், அவர் சார்பாக அவரது மகள் விருதைப் பெற்றுக்கொண்டார்.
இது குறித்து, நார்வேயின் நோபல் நிறுவனத்தின் இயக்குநரும் மச்சாடோவின் செய்தித்தொடர்பாளருமான ஜார்கென் குறிப்பிடுகையில், நோபல் பரிசளிப்பு விழாவில் மச்சாடோவால் கலந்துகொள்ள முடியவில்லை. அவருக்குப் பதிலாக அவரது மகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஆபத்தான சூழலில் உள்ள மச்சாடோ இவ்விழாவில் கலந்துகொள்ள தன் சக்திக்கு இயன்றவரையில் எல்லா விதத்திலும் முயன்ற போதிலும், இறுதியில் கலந்துகொள்ள முடியாமல் போயிற்று. இருப்பினும், மச்சாடோ பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்திருக்கிறோம். இதனையடுத்து, அவருக்குப் பதிலாக அவரது மகள் ஆனா கொரினா சோசா விருதைப் பெற்றுக்கொண்டார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.