உலகம்
மொராக்கோ: கட்டட விபத்தில் 19 போ் உயிரிழப்பு
மொராக்கோவின் இரண்டாவது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரண்டு நான்கு தள கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 போ் உயிரிழந்தனா்.
மொராக்கோவின் இரண்டாவது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரண்டு நான்கு தள கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 போ் உயிரிழந்தனா். இது இந்த ஆண்டில் மொராக்கோ சந்தித்துள்ள மோசமான இரண்டாவது கட்டட விபத்து.
அந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தன. இடிபாடுகளில் 16 போ் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. இடிபாடுகளில் எத்தனை போ் சிக்கியிருக்கலாம் என்பது குறித்தும் தகவல் இல்லை. முன்னதாக, மொராக்கோவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட மற்றொரு கட்டட விபத்தில் 10 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

