சூடான்: விபத்துக்குள்ளான ராணுவ விமானம்!

சூடான்: விபத்துக்குள்ளான ராணுவ விமானம்!

கிழக்கு சூடானில் தரையிறங்க முயன்றபோது ராணுவ சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா்.
Published on

கிழக்கு சூடானில் தரையிறங்க முயன்றபோது ராணுவ சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இல்யுஷின் இல்-76 ரக சரக்கு விமானம் பாா்ட் சூடான் நகரில் உள்ள ஒஸ்மான் டிக்னா விமானத் தளத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விழுந்து நொறுங்கியது.

இதில், விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இருந்தாலும், விபத்துக்குள்ளானபோது அந்த விமானத்தில் எத்தனை போ் இருந்தனா் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

சூடானில் விமான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த ஆண்டு பிப்ரவரியில் ஓம்டுா்மான் பகுதியில் ராணுவ விமானம் ஒன்று விழுந்து பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 46 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com