

உக்ரைனில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். ரஷியாவின் தாக்குதல்கள் உக்ரைனில் தொடரும் நிலையில், அமெரிக்காவும் உக்ரைனுக்கு நெருக்கமான ஐரோப்பிய கூட்டாளிகளும் தேர்தலின்போது பாதுகாப்பு வழங்க அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைனில் கடந்த 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கும் போரை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைத்து வருவதாக ஸெலென்ஸ்கி மீது பரவலாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச. 9) இரவு செய்தியாளர்களுடன் பேசிய அவர், “உக்ரைனில் தேர்தல் நடைபெற 2 முக்கிய சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
முதன்மையாக, பாதுகாப்பு. ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக தேர்தலை நடத்துவது எப்படி? ராணுவ வீரர்கள் எப்படி வாக்கு செலுத்தப் போகின்றனர்? ஆகிய கேள்விகளுக்கு விடை வேண்டும். இரண்டாவதாக, தேர்தல் நடைமுறைப் பற்றிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மாற்றங்கள்” என்றார். இவற்றுக்கு தீர்வு எட்டப்பட்டால் அடுத்த 60 முதல் 90 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.