

வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் அன அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு (2024) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு வாக்குகளில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டி அந்நாட்டின் முக்கிய கட்சிகள் பொதுத்தேர்தலை புறக்கணித்தன.
அந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்தப் போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக மாறியது.
இறுதியில், வங்கதேச உச்சநீதிமன்றம், அமைச்சர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. மேலும், அமைச்சர்கள் சிலரை இளைஞர்கள் விரட்டி விரட்டி தாக்கினர். அப்போது வெடித்த ஜென் ஸீ போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 2500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
நாட்டின் நிலைமை மோசமானதைத் தொடர்ந்தும், இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாத ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதனைத்தொடர்ந்து வங்கதேச ராணுவம் அதிகாரத்தை கையில் வந்தபிறகு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, போராட்டம் முடிவுக்கு வந்தது.
அதன்பின்னர், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் முகம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டு 18 மாதங்கள் ஆன நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் வியாழக்கிழமை அறிவித்தார்.
மொத்தம் 300 தொகுதிகளை கொண்ட வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் 42,000க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் கிட்டத்தட்ட 12 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அதேவேளையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு, பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முகமது யூனுஸ் அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி இடையே இந்தத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.