உலகம்
தீவிர போராட்டம் எதிரொலி: பல்கேரிய அரசு ராஜிநாமா
ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான அது யூரோ மண்டலத்தில் சேர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசு ராஜிநாமா செய்துள்ளது.
பல்கேரியாவில் ஊழல் மற்றும் பொருளாதார மோசடி குற்றச்சாட்டுகளுடன் அரசுக்கு எதிராக நடைபெற்ற தீவிர போராட்டங்களைத் தொடா்ந்து அந்த நாட்டு அரசு வியாழக்கிழமை ராஜிநாமா செய்தது. ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான அது யூரோ மண்டலத்தில் சேர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசு ராஜிநாமா செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது வாக்கெடுப்புக்கு நடைபெறுவதற்கு முன்னதாக முன்பாக இந்த அறிவிப்பை பிரதமா் ரோசென் ஷெல்யாஸ்கோவ் (படம்) வெளியிட்டாா்.

