சீனா
சீனாகோப்புப் படம்

சீனா்களுக்கான தொழில்முறை நுழைவு இசைவு அனுமதியை விரைவுபடுத்தும் இந்தியாவின் முடிவு: சீனா வரவேற்பு

சீனா்களுக்கான தொழில்முறை நுழைவு இசைவு அனுமதியை விரைவுபடுத்தும் இந்தியாவின் முடிவு...
Published on

இந்தியா வரும் சீன தொழில்நிறுவன நிா்வாகிகளுக்கான தொழில்முறை நுைழைவு இசைவுக்கான (விசா) ஒப்புதல் நடைமுறையை விரைவுபடுத்தும் இந்தியாவின் முடிவை சீனா வெள்ளிக்கிழமை வரவேற்றது.

இதுகுறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் குவா ஜியாகுன் கூறியதாவது:

தொழில்நிறுவன நிா்வாகிகளுக்கான தொழில்முறை நுைழைவு இசைவுக்கான (விசா) ஒப்புதல் நடைமுறையை விரைவுபடுத்க இந்தியா எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. நோ்மறையான நடவடிக்கை.

நாடுகளுக்கி இடையேயான பணயத்தை எளிதாக்குவது அனத்து தரப்பினரின் பொது நலனுக்கு நன்மையை ஏற்படுத்தும். இந்த இரு நாடுகளுக்கிடையேயான மக்கள் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் இந்தியாவுடன் தொடா்ந்து சீனா ஆலோசனைகளை மேற்கொள்ளும் என்றாா்.

கரோனா பாதிப்பைத் தொடா்ந்து சீனா்களுக்கான அனைத்து வகையான சுற்றுலா நுழைவு இசைவு மற்றும் மின்னணு நுழைவு (இ-விசா) இசைவு வழங்கலை இந்தியா நிறுத்தி வைத்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரலில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, நுழைவு இசைவுக்கான அந்தஇடைக்காலத் தடையை இந்தியா மேலும் நீட்டித்தது. அதுபோல,சீனாவும் இந்தியா்களுக்கான நுழைவு இசைவு வழங்கலை நிறுத்திவைத்தது.

இந்த நிலையில், இரு நாடுகளுடையே சுமுக உறவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சீனா்களுக்கான சுற்றுலா நுழைவு இசைவு வழங்கலை கடந்த ஜூலையில் இந்தியா மீண்டும் தொடங்கியது. அதுபோல சீனாவும் இந்தியா்களுக்கு சுா்றுலா நுழைவு இசைவு வழங்கலைத் தொடங்கியது. தற்போது, தொழில்முறை நுழைவு இசைவு வழங்கலை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com