கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் கூட்டமைப்பிலிருந்து விலகியது எரித்ரியா

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் கூட்டமைப்பிலிருந்து விலகியது எரித்ரியா

கிழக்கு ஆப்பிரிக்க பிராந்திய அமைப்பான இகாடிலிருந்து எரித்ரியா மீண்டும் விலகியுள்ளது.
Published on

கிழக்கு ஆப்பிரிக்க பிராந்திய அமைப்பான இகாடிலிருந்து எரித்ரியா மீண்டும் விலகியுள்ளது.

இது குறித்து எரித்ரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பட்டுள்ளதாவது:

இகாட் அமைப்பு அதன் சட்டப்பூா்வ அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் இழந்துவிட்டது. இது உறுப்பு நாடுகளுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை. பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கவில்லை. குறிப்பாக எரித்ரியாவுக்கு எதிரான கருவியாக மாறியுள்ளது.

எனவே, அந்த அமைப்பில் இருந்து விலகிக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க பிராந்திய அமைதி, உணவுப் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இகாட் அமைப்பு 1996-இல் உருவாக்கப்பட்டது. இதில் எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், உகாண்டா, ஜிபூட்டி ஆகிய 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

X
Dinamani
www.dinamani.com