

துபை: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியை ஈரான் கைது செய்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அவரது பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவலில், தெஹ்ரானிலிருந்து 680 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஹ்சத் என்ற இடத்தில், மர்மமான முறையில் இறந்து கிடந்த மனித உரிமைகள் நல வழக்குரைஞரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நர்கிஸ் முகமதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதை உறுதி செய்திருக்கும் உள்ளூர் நிர்வாகம், கைது செய்யப்பட்டிருப்பது முகமதி (53) என்பதை உறுதி செய்யவில்லை.
கைது செய்யப்பட்டதும், அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டாரா என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை, கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில், மருத்துவக் காரணங்களுக்காக அவர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
முகமது கைது நடவடிக்கை, மிகவும் கவலை அளிப்பதாக நார்வேயின் நோபல் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானிய அதிகாரிகள், முகமதி எங்கிருக்கிறார், அவரது பாதுகாப் உறுதி செய்யுமாறும், எந்த நிபந்தனையும் இன்றி அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
ஈரான், ஒரு பக்கம் பொருளாதாரத் தடைகள், நலிவடைந்த பொருளாதாரம் மற்றும் இஸ்ரேலுடனான புதிய போர் அச்சம் ஆகியவற்றுடன் போராடி வரும் நிலையில், மறுபக்கம் அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் விருப்பம் தெரிவித்து வரும் நேரத்தில், முகமதியைக் கைது செய்திருப்பது மேற்கத்திய நாடுகளிடமிருந்து வரும் அழுத்தத்தைத் அதிகரிக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.