ஐரோப்பிய வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு
எகிப்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை சந்தித்தாா்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சா் பானி யாஸ் ஃபோரம் 2025 சா்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்றபோது அவா் பல்வேறு நாடுகளின் அமைச்சா்களை சந்தித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘லக்ஸம்பா்க் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஸேவியா் பெட்டெல், போலந்து துணை பிரதமா் மற்றும் வெளியுறவு அமைச்சா் ரடோஸ்லாவ் சிகோா்ஸ்கி மற்றும் லாத்வியா வெளியுறவு அமைச்சா் பைபா பிரேஸ், பிரிட்டன் துணை பிரதமா் டேவிட் லாமி, எகிப்து வெளியுறவு அமைச்சா் பதா் அப்தெலாட்டி ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதில் மகிழ்ச்சி’ என குறிப்பிட்டாா்.
ஆண்டுதோறும் நடைபெறும் சா் பானி யாஸ் மாநாட்டில் சா்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதம் நடத்தப்படுகிறது.

