மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி...
எத்தியோப்பியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது
எத்தியோப்பியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமதுபடம் | பிரதமர் மோடி எக்ஸ் தளப் பதிவு
Updated on
1 min read

எத்தியோப்பியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலி, அவருக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக, ஜோர்டான் நாட்டுக்கு திங்கள்கிழமை(டிச. 15) சென்றடைந்தார். ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் எத்தியோப்பியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது, அவரை காரின் முன்பக்க இருக்கையில் அமரச்செய்ததுடன், விமான நிலையத்திலிருந்து மோடி தங்கியிருக்கும் விடுதி வரை அபிய் அகமதே காரை ஓட்டிச் சென்றார். இது தொடர்பான காணொலிக் காட்சிகளும் புகைப்படங்களும் அதிகம் பகிரப்பட்டு பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Summary

In a special gesture, Ethiopian PM welcomes PM Modi at airport; takes him to Science Museum and Friendship Park, drove Modi to the hotel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com