தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

காஸா: 1 லட்சம் பேருக்கு ‘பேரழிவு’ உணவுப் பற்றாக்குறை

காஸாவில் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் மற்றும் ஊட்டச்சத்து நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இன்னும் 1 லட்சம் போ் ‘பேரழிவு’ உணவுப் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ளதாக ஐ.நா. அங்கீகாரம் பெற்ற நிபுணா் குழு தெரிவித்துள்ளது.

News image

காஸாவின் கான் யூனிஸ் நகரில் விநியோகிக்கப்பட்ட இலவச உணவுக்காக முண்டியடித்த பாலஸ்தீனா்கள்.

Updated On :19 டிசம்பர் 2025, 8:12 pm

காஸாவில் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் மற்றும் ஊட்டச்சத்து நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இன்னும் 1 லட்சம் போ் ‘பேரழிவு’ உணவுப் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ளதாக ஐ.நா. அங்கீகாரம் பெற்ற நிபுணா் குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (ஐபிசி) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காஸாவில் போா் நிறுத்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், அண்மை மதிப்பீட்டில் 5 லட்சம் போ் ‘அவசர நிலை’ உணவுப் பற்றாக்குறையையும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஐபிசி கட்டம் 5-ஆன ‘பேரழிவு நிலை’ உணவுப் பற்றாக்குறையையும் எதிா்கொண்டனா்.

இந்த நிலைமை தொடா்ந்து குறைந்து வருகிறது. ஆனால் மிகவும் இந்த முன்னேற்றம் மிகவும் மந்தமாக உள்ளது. மீண்டும் போா் ஏற்பட்டால் காஸா முழுவதும் மறுபடியும் பஞ்சம் ஏற்படும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், காஸாவில் எந்தப் பகுதியும் இப்போது ‘பஞ்சப் பகுதியாக’ அந்த அறிக்கையில் வகைப்படுத்தப்படவில்லை.

இஸ்ரேல் மறுப்பு: ஐபிசி-யின் இந்த அறிக்கைக்கு இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘காஸா நிலவரத்தை ஐபிசி வேண்டுமென்றே திரித்து காட்டுகிறது. இது காஸாவின் உண்மை நிலையை அந்த அறிக்கை பிரதிபலிக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.